பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2007-09-20
றமழான் மாதத்தில், தினமும் நோன்பை முடிக்கும் மாலைப் போசனமான இப்தார் வைபவம் செப்டெம்பர் மாதம் 20ம் திகதி அன்று கௌரவ. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
அன்றைய தினம் மாலை நேரம் ஆரம்பமான இந்த விசேட நிகழ்வில், கௌரவ பிரதம அமைச்சர் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரபு நாடுகளின் தூதுவர்கள், முஸ்லிம் தலைவர்கள், பிற சமயத் தலைவர்கள், மற்றும் வேறு இராஜ தந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்முறையும் இந்த நிகழ்வு அரபியன் றோயல் கூட்டு நிறுவனங்களின் தவிசாளரான திரு. M.B.M. ஹம்சா JP அவர்களின் அநுசரணையுடன் இடம்பெற்றது. இவ்வைபவத்திற்கான ஏற்பாடுகள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், கௌரவ ரவூப் ஹக்கிம் அவர்களின் பாராளுமன்ற இணைப்புச் செயலாளர் திரு. ஹசன் அல் (f)பாசி ஷெரிப் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.
இஸ்லாமியக் கலண்டரின் படி, ஒன்பதாவது மாதமான றமழான் மாதமானது, இஸ்லாமிய வருடத்தில், மிகவும் போற்றப்படுவதும், புனிதமானதும், ஆன்மீக ரீதியாகப் பயனளிப்பதுமான ஒரு மாதமாகக் கருதப்படுகிறது. உலகெங்கும் பரந்திருக்கும் முஸ்லிம்களின் புனிதமான, பண்டிகைக் காலமான இம்மாதத்தில், நோன்பிருப்பது மட்டுமின்றி தொழுகையும், ஈகையும் கூட வலியுறுத்தப்படுகின்றன. பிறருக்கு உணவளிப்பதை தானத்தின் ஒரு வகையாகக் கருதும் முஸ்லிம்கள், அது மிகவும் நன்மை பயக்கும் என்றும் நம்புகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், தற்போதைய சபாநாயகர் கௌரவ W.J.M. லொக்குபண்டார அவர்களின் முன்முயற்சியினால் நடைபெறும் இப்புனித நிகழ்வானது, நாட்டில் சமய மற்றும் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks