பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2007-12-20
2007 டிசம்பர் 20 ஆம் திகதி கெளரவ சபாநாயகர் அவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வருடாந்த கிறிஸ்மஸ் கீதங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாண்டின் நிகழ்ச்சி "இனிய தியவன்னா நத்தார்" என நாமம் சூட்டப்பட்டிருந்தது
மாலைப்பொழிதின் ஆரம்பத்திலேயே உத்தியோகபூர்வ வாசஸ்தல வளவினுள் மக்கள் குவியத்தொடங்கினர். வழக்கம்போன்று, கட்டிடத்தொகுதி முழுவதும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டி ருந்தது. புகுமுக மண்டபத்தின் மருங்கில் ஒளிவிளக்குகள் இலங்கிக் கொண்டிருக்க, தேசிய மட்ட கிறிஸ்மஸ் பண்டிகைக்கான எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியின் முதல் அரைவாசியில், மிகவும் பிரபல்யமான சிங்கள மற்றும் தமிழ் கீதங்களால் உதய தின நிகழ்வு அர்த்தமுள்ளதாக்கப்பட்டது. பின்னர் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் உயிரோட்டமான அலங்காரம் வந்திருந்தோரை வசீகரித்த சிறப்பம்சமாகும்.
பி.ப. 6.00 மணிக்கு ஆரம்பித்த மாலை ஆராதனை முப்பது நிமிடங்களுக்கு சற்று அதிகம் நீடித்தது. ‘ மங்கள மேளம் ’ ஒலிக்க விசேட அறையினுள் புனிதக் குடும்பத்தின் வருகை குறிப்பிடத்தக்கதாகும். ஆராதனையின் இறுதியில், வண. பிதா பெனடிக்ற் ஜோசப் அவர்களால் எழுதப்பட்ட “ தேஷ்ய நத்தல் கீதாவலியென் மதுவென ஜயக்கொடி பியலகுண ” என்னும் தலைப்பிலான நூல் வெளியிடப் பட்டதுடன் கௌரவ சபாநாயகர் அவர்களும் மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா அவர்களுக்கும் வைபவத்துக்கு வருகை தந்திருந்த ஏனைய முக்கியஸ்தர்களுக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டன. அவர்களுக்குப் புறம்பாக, சமயப்பெரியார்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய சிறப்பு அதிதிகள் மற்றும் பாராளுமன்ற செயலகப் பணியாளர்களும் நிகழ்வில் பங்குபற்றினார்கள். பின்னர் கீத ஆராதனை முன்றலில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வைக் குறிப்பதற்காகப் பல்வேறு குழுக்களால் பாடப்பட்ட கீதங்கள் மிகப் பொருத்தமாக இருந்ததுடன் திரண்டிருந்த மக்களையும் வசீகரித்தது. திரு ஐவர் டெனிஸ் அவர்களின் வருகையும் சில கீதங்களைப் பாடியதும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் தொடுக்கும் இணைப்பு என அவருக்கு நாமம் சூட்டல் தகும். மேலும் லதா வல்பொல பாடிய “ நமோ மேரியானி ” மற்றும் திருமதி அஞ்ஜலின் குணதிலக பாடிய “ றே தரு பபலனவா ” ஆகியவை பலரின் பாராட்டைப் பெற்ற கவர்ச்சிமிகு கீதங்களாகும்.
அசோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் லிமிரெட், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீனத் தொலைக்காட்சி வலையமைப்பு, போன்ற சுவையான உணவை உண்பதற்குமான வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
திரண்டு வந்து இனிய கீத இசையில் இன்புற்றி ருந்தவர்களுக்கு தாகம் தணிப்பதற்கும் சுவையான உணவை உண்பதற்குமான வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மற்றுமொரு முக்கியமான நிகழ்வு இந்நிகழச்சிக்காகத் தெரிவுசெய்யப்பட்ட திரு. ஐவர் டெனிஸ் அவர்களின் பாடல்களைக் கொண்ட இறுவட்டு வெளியிடப்பட்டமையாகும்.
முழு நிகழ்ச்சியும் தேசிய ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பினால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தின இரவில் தேசிய ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks