01

E   |   සි   |  

 திகதி: 2018-06-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0471/2018: Auditor General Inquiry regarding foreign trip by PC members and executive officers - Uva PC

471/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) ஊவா மாகாணசபையில் இடம்பெற்றுள்ள மற்றும் இடம்பெற்று வருகின்ற முறைகேடுகள் சம்பந்தமாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் SIN/B/AG/KI/2017/02 இலக்கமும் 2017.04.20 திகதியும் கொண்ட புலனாய்வு அறிக்கை ஒன்று ஊவா மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென்பதை அவர்அறிவாரா;

(ஆ) (i) அவ்வறிக்கையில் ஊவா மாகாணசபையின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பதவிநிலை தரத்திலான உத்தியோகத்தர்களுக்கான வெளிநாட்டுக் கற்கை விஜயங்கள் சம்பந்தமாக வெளிக்கொணரப்பட்டுள்ள, பந்தி இலக்கம் 3 (அ) (i) தொடக்கம் (x) வரையான விடயங்களை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா;

(ii) மேற்படி வெளிக்கொணரல்கள் தொடர்பான அறிக்கையில் (ஆ)(i) தொடக்கம் (iii) வரை மேற்கொண்டுள்ள அவதானிப்புகளைச் சமர்ப்பிப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-06

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks