02

E   |   සි   |  

 திகதி: 2018-07-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0455/2018: Complaints received and resolved by the Financial Crimes Division

1997/ '17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) நிதி மோசடி பற்றிய விசாரணைகள் பிரிவுக்கு 2015 தொடக்கம் 2017 யூன் 30 ஆம் திகதி வரை கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை வருடாந்த அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதி வரை,

(i) விசாரித்து முடிக்கப்பட்ட, விசாரிக்கப்பட்டு வருகின்ற மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) வழக்குத் தொடர அல்லது சட்டத்துறைத் தலைமையதிபதியின் ஆலோசனைக்காக ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) இதுவரை சட்டத்துறைத் தலைமையதிபதியின் ஆலோசனை கிடைக்காத முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(v) தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அரசியல்வாதிகள் தொடர்புபட்ட வழக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

ஒவ்வொரு வருடங்களுக்கமைய வெவ்வேறாக யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-19

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks