01

E   |   සි   |  

 திகதி: 2010-11-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0576/2010: Raddolugama Housing Scheme

0576/ ’10 கெளரவ ஜோன் அமரதுங்க,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) ரத்தொழுகம வீடமைப்புத் தொகுதியின் எல்லையிலுள்ள கால்வாய்க்குக் குறுக்காக, ஏலத்தில் விடப்பட்ட காணியில் வசிக்கும் வணிக சிங்க என்பவருக்கு ஒரு பாதையைப் பெற்றுக் கொடுப்பதற்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் திட்டமிட்டிருந்தார் என்பதையும், (ii) அதிமேதகு ஜனாதிபதியிடம் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தமைக்கமைய, வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகத்தால் 2006.01.31 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம் அந்தப் பாதையை மூடிவிடுவதற்கு கட்டளையிடப்பட்டதென்பதையும், (iii) முன்னாள் பொது முகாமையாளர் வனிகசிங்க ஊடாக பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு போலியான விடயங்களை சமர்ப்பித்து அந்த பாதையை பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார் என்பதையும் அவர் அறிவாரா? (ஆ) (i) வனிகசிங்க என்பவரின் வீட்டுக்கு முன்புறமாக அகலமானதொரு பாதை உள்ளதென்பதையும், (ii) வீட்டுக்குப் பின்புறமாகவும் ஒரு பாதையை பெற்றுக் கொடுக்க பற்றுச் சீட்டு மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு உறுதியொன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதென்பதையும், (iii) இது பாராளுமன்ற வரலாற்றில் ஆலோசனைக் குழுவைத் தப்பான வழியில் இட்டுச் சென்ற முதல் சந்தர்ப்பமாகும் என்பதையும் அவர் ஏற்றுக்கொள்வாரா? (இ) உரிய சகல அறிக்கைகளும் அதிகாரசபையின் தலைவரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் 2006.01.31 ஆம் திகதிய கடிதத்தின் விதப்புரைக்கு அமைய அந்தப் பாதையை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-11-12

கேட்டவர்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks