02

E   |   සි   |  

 திகதி: 2018-07-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0220/2018: Construction of Meesalai Technical College

220/ '18

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிக்கு தொழிற்பயிற்சியின் நிமித்தம் வருடாந்தம் பெருமளவிலான விண்ணப்பங்கள் கிடைப்பதோடு, மிகவும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளே தெரிவு செய்யப்படுகின்றனர் என்பதையும்;

(ii) யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்வாய்ப்புக்களற்ற ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு இத்தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை என்பதையும்;

(iii) குறித்த இளைஞர் யுவதிகளின் நலன் கருதி யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை நிர்மாணிக்கும் பொருட்டு தென்மராட்சிப் பிரதேசத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய மகா வித்தியாலயத்திற்குரிய 06 ஏக்கர் காணி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;

(iv) குறித்த காணியை அவதானித்த தொழிற்பயிற்சித் திணைக்களத்தின் அதிகாரிகளால் தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கருத்திட்ட முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மீசாலையில் புதிய தொழில்நுட்பக் கல்லூரியை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி கல்லூரியின் நிர்மாணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-06

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks