02

E   |   සි   |  

 திகதி: 2018-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0217/2018: Freshwater fishing families Kilinochchi

217/ '18

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு ,—

(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள 11 குளங்களைச் சார்ந்ததாக ஏறக்குறைய 750 குடும்பங்கள் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனரென்பதையும்;

(ii) அண்மையிலிருந்து நிலவிவருகின்ற கடும் வறட்சி காரணமாக இந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றாகவே இழக்கப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இந்த மக்களின் வாழ்வாதாரம் பற்றிக் கவனம்செலுத்தி ஏதேனும் நட்டஈட்டினை வழங்கக்கூடிய இயலுமை உள்ளதா;

(ii) ஆமெனில் வழங்கக்கூடிய நிவாரணம் யாது

(iii) அந்த நிவாரணம் வழங்கப்படும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-19

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks