02

E   |   සි   |  

 திகதி: 2018-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0216/2018: Fishing families in Poongari

216/ '18

கெளரவ டக்ளஸ் தேவானந்தா,— கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் வலைப்பாடு கிராமத்தில் 300 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன என்பதையும்;

(ii) மேற்படி குடும்பங்களில் சுமார் 100 குடும்பங்கள் நேரடியாக மீன்பிடிக் கைத்தொழிலிலும், ஏனைய குடும்பங்கள் வேறு தொழில்களிலும் ஈடுபடுகின்ற போதிலும், போதியளவு வருமானம் இன்றி வாழ்ந்துவருகின்றனர் என்பதையும்;

(iii) மேற்படி மீன்பிடித் தொழிலாளர்கள் நாளாந்தம் 1000 கிலோ கிறாமுக்கும் அதிகமான நண்டுகள் மற்றும் கடல் உணவுகளை பிடித்து அவற்றை வேறு இடங்களுக்கு அனுப்பி பதனிட்டு வெளி மாகாணங்களுக்கு அனுப்புகின்றனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி மக்களின் வாழ்வாதாரம் பற்றிக் கவனம் செலுத்தி, மேற்படி பிரதேசத்தில் கடல் உணவுகளைப் பதனிடும் தொழில்சாலையொன்றை நிர்மாணிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-08

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks