02

E   |   සි   |  

 திகதி: 2018-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0215/2018: Families residing in the welfare centers in Pooththottam Vavuniya

215/ '18

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த 150 குடும்பங்கள் 25 வருடங்களாக வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் வசித்து வருகின்றன என்பதையும்;

(ii) இந்த 150 குடும்பங்களை நெடுங்கேணி, சின்ன அடம்பன் பிரதேசத்தில் மீள்குடியமர்த்துவதாக வவுனியா மாவட்டச் செயலகம் அறிவித்திருந்த நிலையில், இக்குடும்பங்களுக்கான வீடுகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நெடுங்கேணி சின்ன அடம்பன் பிரசேத்தில் 68 வீடுகளும் புளியங்குளம் பிரதேசத்தில் 82 வீடுகளும் "லயிகா ஞானம் அறக்கொடைத் தாபனத்தால்" நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட 150 வீடுகளில் அந்த மக்கள் மீள்குடியேறி உள்ளனரா என்பதையும்;

(ii) ஆமெனின், அது எத்திகதியிலிருந்து என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-07

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks