01

E   |   සි   |  

 திகதி: 2010-11-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0566/2010: Cooperatives Act

0566/ ’10 கெளரவ புத்திக பத்திரண,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1) (அ) கூட்டுறவுச் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியினால் பதிவு செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட இலங்கை மனிதவள அபிவிருத்தி வங்கிச் சங்கத்தின் அனைத்துக் கிளைகளும் தற்போது ஒழிக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா? (ஆ) (i) இவ்வங்கிக்கு உரியதாயிருந்த கிளைகள் எத்தனை என்பதையும், (ii) வைப்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் வைப்பிலிடப்பட்டிருந்த பணத் தொகை எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) (i) வைப்புத் தொகைகளை மீளளிப்பதற்காக 2007 ஆம் ஆண்டில் இடைக்காலக் குழுவொன்று நியமிக்கப்பட்டதா என்பதையும், (ii) அவ்வாறாயின், இந்த இடைக்காலக் குழுவின் பெறுபேறுகள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) (i) குறிப்பிட்ட வங்கியில் வைப்பாளர்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய முழுத் தொகை யாதென்பதையும், (ii) இத்தொகையை மீண்டும் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும், (iii) இன்றேல், இத்தொகைகளை செலுத்தி முடிக்கும் இறுதித் திகதி யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-11-11

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks