பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
132/ '18
கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) களுகங்கை, மொரகஹகந்த கருத்திட்டம் காரணமாக மாத்தளை மாவட்டத்தில், லக்கல தேர்தல் தொகுதியில் இடம்பெயர்ந்த குடும்பங்களை, லக்கல தேர்தல் தொகுதியிலேயே குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது என்பதை அறிவாரா;
(ii) ஆமெனில், இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் வழங்கப்பட்ட காணிகளின் பரப்பளவு எவ்வளவு;
(iii) அவ்வாறு வழங்கப்பட்ட காணிகள், தற்போதைய சந்ததியினருக்கு போதியதாக இருப்பினும், அடுத்த சந்ததியினருக்கு போதியதாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா;
(iv) ஆமெனில், மொரகஹகந்த கருத்திட்டம் காரணமாக மீள குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் அடுத்த சந்ததியினர் எதிர்கொள்வதற்கு நேரிடுகின்ற காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-19
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks