பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2018-06-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0129/2018: lakes not supplied by the Wayamba Stream project

129/18

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மகாவலி "சுரக்சிததா" முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வயம்ப கால்வாய் கருத்திட்டத்தின் பிரதான கால்வாய் செல்லும் தம்புள்ளை, கலேவல பிரதேச செயலாளர் பிரிவுகளில் 20 கி.மீ. நீளமான கால்வாய்க்கு கீழாக அமைந்துள்ள தற்சமயம் மழைநீரால் மாத்திரம் வளமூட்டப்படும் சிறு குளங்கள், அணைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவு அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;

(ii) மேற்படி சிறிய குளங்கள், அணைகள் முறைமை அனைத்தையும் வளமூட்டுவதற்கு வயம்ப கால்வாய் ஊடாக நீர்ப்பாசன நீர் வழங்கப்படுகின்றதா என்பதையும்;

(iii) இதற்காக தற்சமயம் திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்ட குளங்களில் வயம்ப கால்வாய் கருத்திட்டத்தினால் நீர் வழங்கப்படும் மற்றும் நீர் வழங்கப்படாத குளங்களின் பெயர்கள் தனித்தனியே யாவை என்பதையும்;

(v) பிரதானமான கால்வாய்க்கு கீழாக உள்ள குளங்கள் அணைகளை வளமூட்டாது, வடமேல் மாகாணத்திற்கு நீரை வழங்குதல் தம்புள்ளை, கலேவல விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமையாதா என்பதையும்;

(vi) இதற்குத் தீர்வாக நீர் வழங்கப்படாத குளங்களுக்கு நீரை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துவாரா என்பதையும்;

(vii) ஆமெனின், எத்திகதியில் என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-05

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks