01

E   |   සි   |  

 திகதி: 2010-10-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0544/2010: Mahinda Chinthana

0544/ ‘10

கெளரவ எம்.ரி. ஹசன் அலி,—  சமூக சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      முதியோருக்கான தேசிய செயலகத்தின் மூலம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளைக் கொண்டுள்ள முதியோர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளும் நிவாரணங்களும் யாவை என்பதையும்,

(ii) மேற்படி அடையாள அட்டையொன்றைக் கொண்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பமொன்றின் வயோதிபர் ஒருவருக்கு மாதந்தோறும் ஏதேனும் நிதி உதவித் தொகையொன்றை வழங்கும் வேலைத்திட்டமேதும் உண்டா என்பதையும்,

(iii) மகிந்த சிந்தனை கொள்கைகளின் பிரகாரம், மேற்படி அடையாள அட்டைகளை கொண்டுள்ள வயோதிபர் ஒருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள ஆட்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகள், வசதிகள் மற்றும் நிவாரணங்களை செயற்படுத்துவதற்கு ஏதுவாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் யாவை என்பதையும்,

(ii) மேற்படி சுற்றறிக்கைகளை அமுல்படுத்தும் நிறுவனங்கள் யாவையென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-19

கேட்டவர்

கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சமூக சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks