01

E   |   සි   |  

 திகதி: 2018-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2398/2018: Financial benefits to Kidney Patients of Kurunegala District from Arogya Lottery

2398/ '17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) "நீரோகா லொத்தர் " ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது;

(ii) இந்த லொத்தரின் ஆரம்ப நோக்கங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

(ஆ) இந்த லொத்தரின் ஆரம்பம் தொடக்கம் இது வரை,

(i) பெற்ற வருமானம்;

(ii) பரிசாக வழங்கப்பட்ட பணத் தொகை;

(iii) சிறுநீரக நோயாளிகளுக்காக வழங்கப்பட்ட பணத் தொகை;

ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) வட மேல் மாகாணத்தில், குருநாகல் மாவட்டத்தினுள் சிறுநீரக நோய் பரவிவருவதால் மேற்படி மாவட்டத்துக்கு வழங்கப்படும் நிதி ஏற்பாடுகளை அதிகரிப்பதற்கான இயலுமை காணப்படுகின்றதா;

(ii) ஆமெனில், இது தொடர்பான விபரங்கள் யாவை;

என்பதையும் அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-03-21

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks