04

E   |   සි   |  

 திகதி: 2010-09-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0423/2010: Norochchole Power Plant

0423/ ‘10

கெளரவ (அல் ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தகனம் செய்வதற்குத் தேவையான நிலக்கரி எந்தெந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதையும்,

           (ii)    நிலக்கரி தகனம் மூலம் உற்பத்தியாகும் சாம்பலை மாசடைந்த புகையிலிருந்த நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் வழிமுறைகள் யாவையென்பதையும்,

(iii) மாசடைந்த புகையில் அடங்கியுள்ள கந்தகம் மற்றும் சல்பேற்றை வெளியேற்றும் பொறிமுறை யாதென்பதையும்,

(iv) மாசகற்றப்பட்ட புகையை வளிமண்டலத்திற்கு விடுவிக்கும் புகைபோக்கியின் உயரம் எத்தனை மீற்றர்களென்பதையும்,

(v) மாசகற்றலின் முடிவின் போது விடுவிக்கப்படும் புகையில் பெணுவதற்கு எதிர்பார்க்கப்படும் ஆக்கக் கூறுகளின் உள்ளடக்கம் யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) வலுச்சக்தி நிலையத்தின் குளிரூட்டல் செயற்பாடுகளுக்கான நீர் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகின்றதென்பதையும்?

(ii) வலுச்சக்தி நிலையத்தின் உள்ளீர்ப்பு மற்றும் வெளிச்செலுத்துகைகளில் பேணப்படும் நீர் வெப்பநிலை மாற்றம் எத்தனை பாகை செல்சியஸ் என்பதையும்,

(iii) வலுசக்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கொதி நீரானது கடல்வாழ் உயிரினங்கள் மீது ஏற்படுத்தக்கூடிய பாதகமான தாக்கங்கள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-09-09

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks