01

E   |   සි   |  

 திகதி: 2017-07-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

1604/2017: Power Plants operating to supply electricity to Western Province

 

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ​மேல் மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள, இலங்கை மின்சார சபைக்கு விநியோகிப்பதற்கென மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு மின்னுற்பத்தி நிலையத்தினதும் உற்பத்தி கொள்ளளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு மின்னுற்பத்தி நிலையத்திலிருந்தும் வெளியேற்றப்படும் சுற்றாடலை பாதிக்கும் வாயுக்கள் பற்றி மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) சுற்றாடல் நேயம்மிக்க முறையியலை பயன்படுத்துவதன் மூலம் கொழும்பு நகரம் உள்ளிட்ட மேல் மாகாணத்திற்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-28

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks