04

E   |   සි   |  

 திகதி: 2010-09-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0411/2010: Hanthana Watta - Kandy

0411/ ‘10

கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,—  அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கண்டி ஹந்தான தோட்டத்திலிருந்து 45 ஏக்கர் 02 ரூட் 16 பர்சஸ் நிலப் பரப்பினை சட்டபூர்வமற்ற காணிப் பரிமாற்றமொன்றாக ஷhமினி கிரிஎல்ல மற்றும் பிலிப் ஜயவர்த்தன என்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) இக் காணியானது சட்ட ரீதியாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்டதன் பின்னர் மட்டுமே வழங்கப்படமுடியுமெனினும், இந்த நடவடிக்கை முறையைப் பின்பற்றாது முன்னாள் அமைச்சரும், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தலைவரும் மேற்படி காணியை சட்டரீதியற்ற வகையில் வழங்கியுள்ளனர் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) (i) சட்ட ரீதியாக வழங்கப்படவில்லையெனின், இக்காணியை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் மீள சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்,

(ii) சட்டரீதியற்ற இக்காணிக் கொடுக்கல் வாங்கலுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது யார் என்பதையும்,

(iii) இவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும், 

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-09-09

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks