01

E   |   සි   |  

 திகதி: 2010-08-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0403/2010: Illegal Gem Mining

0403/ ‘10

கெளரவ வை. ஜி. பத்மசிறி,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     அனுமதியற்ற இரத்தினக்கல் அகழ்வினைத் தடுப்பதற்காக தேசிய இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபையினால் 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை யாது என்பதையும்,

(ii) இதன் மூலம் பெறப்பட்ட அல்லது பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட மொத்த வருமானம் யாது என்பதையும்

அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?

(ஆ) (i) 2009 ஆம் ஆண்டில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மூலம் எத்தனை மில்லியன் மொத்த வருமானமாக ஈட்டப்பட்டது என்பதையும்,

(ii) அது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதா அல்லது குறைவடைந்துள்ளதா என்பதையும்,

(iii) கிம்பர்லி செயற்பாட்டு அத்தாட்சி முறை என்றால் என்னவென்பதையும்

(iv) 2009 ஆம் ஆண்டில் இரத்தினக்கல் ஆபரணங்கள் ஏற்றுமதியினை மேம்படுத்து வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-20

கேட்டவர்

கௌரவ வை. ஜீ. பத்மசிரி, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks