04

E   |   සි   |  

 திகதி: 2010-08-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0399/2010: Onamental Fish

0399/ ‘10

கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள, அலங்கார மீன் ஏற்றுமதி நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

           (ii)    2009ஆம் ஆண்டில் அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் ஈட்டிய மொத்தம் எவ்வளவென்பதையும்,

(iii) இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருமான அதிகரிப்பா அல்லது வீழ்ச்சியா என்பதையும்,

(iv) 2009ஆம் ஆண்டில் உலக சந்தையில் அலங்கார மீன்களுக்கு நிலவிய கேள்வியில் இலங்கையின் ஏற்றுமதி சதவீதம் எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) அலங்கார மீன்வளா்ப்புக் கைத்தொழிலில் மிகை நுகர்வு காரணமாக தற்போது அழிவு நிலைக்கு உட்பட்டுள்ள மீனினங்கள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்,

(ii) அலங்கார மீன் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான உத்தேச திட்டங்கள் இருக்கின்றனவா என்பதையும்,

(iii) ஆமெனில், அவை யாவையென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-20

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks