01

E   |   සි   |  

 திகதி: 2010-08-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0397/2010: Kidney Patients in Anuradhapura & Polonnaruwa

0397/ ‘10

கெளரவ செஹான் சேமசிங்க,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      அனுராதபுரம், பொலன்னறுவை  மாவட்டங்களில் 2009 ஆம் ஆண்டில் இனங் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

           (ii)     அதனை முன்னைய அண்டுடன் ஒப்பிடுகையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) ரஜரட்ட பிரதேசத்தில் சிறுநீரக நோய் பரவலாக காணப்படுவதற்கான காரணங்கள் இனங்காணப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) அவ்வாறெனின், அவை யாவை என்பதையும்,

(iii) குறிப்பிட்ட காரணிகளை பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அல்லது அமுலாக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-20

கேட்டவர்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks