04

E   |   සි   |  

 திகதி: 2017-02-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1349/2017: பாடசாலை மாணவர்களின் தொழில் ஆற்றலை வளர்த்தல் : நடவடிக்கை

1349/ '16

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்கள் பொதுவாக தொழில் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்வருகின்றார்கள் இல்லையென்பதையும்;

(ii) இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் தொழில் சந்தையின் கேள்வியை நிரப்புகின்றபோது இளம் சந்ததியினரிடமுள்ள திறன்களில் பொருந்தாத தன்மை காணப்படுகின்றதென்பதையும்;

(iii) பிள்ளைகளுக்கு பல்வகை ஆற்றல்களுக்கான பயிற்சிகளை பெற்றுக்கொடுத்து, புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டிய அத்தியாவசிய தேவை காணப்படுகின்றதென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) ஆரம்ப நிலை தொடக்கம் மூன்றாம் நிலை வரை பாடசாலை மாணவர்களின் தொழில் ஆற்றல்களை வளர்ப்பதற்கு உறுதுணையாகும் முகமாக, கல்வி அமைச்சினதும் ஒத்துழைப்புடன் பாடசாலை பாடத்திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், இந்நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-04-07

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks