பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2017-05-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

1326/2017: ஒல்லாந்தர் இராஜதுரோகிகளாகப் பிரகடனப்படுத்திய இலங்கையர்கள் :விபரம்

கௌரவ புத்திக்க பத்திரண,— உள்ளக அலுவல்கள், வட மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இராஜ துரோகிகளாக பிரகடனஞ் செய்யப்பட்ட இலங்கையர்கள் யாவர்;

(ii) இவர்கள் இராஜ துரோகிகளாக பிரகடனஞ் செய்யப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இராஜ துரோகியாக பிரகடனஞ் செய்யப்பட்ட பின்னர் அவர் இழக்கின்ற சிறப்புரிமைகள் யாவை;

(ii) அத்தகைய சிறப்புரிமை இழப்பு அவர்களின் குடும்பத்தவர்களைப் பாதிக்குமா;

(iii) ஆமெனில், அது எவ்வாறு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) ஒல்லாந்தர்களால் இராஜ துரோகிகளாக பிரகடனஞ் செய்யப்பட்ட இலங்கையர்களை அப்பதிவேடுகளிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா;

(ii) இவர்களை தேசிய வீரர்களாக பிரகடனஞ் செய்ய நடவடிக்கை எடுப்பாரா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-26

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-05-26

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.பீ. நாவின்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks