பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0366/ ‘10
கெளரவ அஜித் பி. பெரேரா,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,
(அ) (i) உலக சுகாதார அமைப்பின் தரங்களுக்கு அமைய மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் காணப்பட வேண்டிய குறைந்தமட்ட விகிதாசாரம் யாது என்பதையும்,
(ii) சுகாதார அமைச்சு ஏற்றுக்கொள்கின்ற தரங்களுக்கு அமைய இலங்கையில் மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் காணப்படவேண்டிய குறைந்தமட்ட விகிதாசாரம் யாது என்பதையும்,
(iii) தற்போது, இலங்கையில் மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான விகிதாசாரம் எவ்வளவு என்பதையும்,
(iv) மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,
(v) மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை வேறாக எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா?
(ஆ) (i) இலங்கைப் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் மருத்துவர்களை அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்பதை நிறுத்துவதற்கு அல்லது மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்,
(ii) அவ்வாறாயின் அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-09-08
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks