04

E   |   සි   |  

 திகதி: 2016-12-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1094/2016: Buses for 907 Negombo Chilaw Road

1094/ '16

கெளரவ அசோக்க பிரியந்த,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நீர் கொழும்பு — சிலாபம் வீதியின், வீதி இலக்கம் 907 இன் கீழ் தற்போது பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துகின்ற டிப்போக்கள் யாவை என்பதையும்;

(ii) ஒவ்வொரு டிப்போ மூலம் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற பஸ் வண்டிகளின் எண்ணிக்கை தனித்தனியே யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி வீதியில் மு.ப. 4.00 மணி முதல் மு.ப. 6.00 மணி வரை மற்றும் பி.ப. 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடாமையும், பி.ப. 5.00 மணி முதல் மேற்படி தனியார் பஸ் வண்டிகள் தமது சேவைகளை வென்னப்புவ, மாரவில மற்றும் மாதம்பே நகரங்கள் வரை மாத்திரம் மேற்கொள்வதன் மூலம் பயண முடிவுகள் வரை பயணிக்கின்ற பெரும் எண்ணிக்கையான பயணிகள் பாரியளவில் பாதிக்கப்டுகின்றார்கள் என்பதையும் அவர் அறிவாரா?

(இ) மேற்படி பஸ் சேவையைப் பயன்படுத்துகின்ற பயணிகள் பாரியளவில் பாதிப்பை எதிர்நோக்குவதன் காரணமாக, மு.ப. 4.00 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை மற்றும் பி.ப. 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஆகக் குறைந்தது அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை இபோச பஸ் வண்டியொன்றை மேற்படி வீதியில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-09

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks