02

E   |   සි   |  

 திகதி: 2010-10-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0359/2010: Government School

0359/ ’10 

 கெளரவ அஜித் பி. பெரேரா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)இலங்கையிலுள்ள, (i) அரச தேசிய பாடசாலைகளினதும் ஏனைய அரச பாடசாலைகளினதும் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும், (ii) முதலாம் வகுப்புத் தொடக்கம் உயர்தரம் வரை ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் நடைபெறுகின்ற அரச பாடசாலைகளின் எண்ணிக்கை மற்றும் சகல வகுப்பு களுக்கும் ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் நடைபெறாவிடினும் ஆகக்குறைந்தது ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் நடைபெறுகின்ற அரச பாடசாலைகளின் எண்ணிக்கை மாவட்ட மட்டத்தில் தனித்தனியாக எத்தனையென்பதையும், (iii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (ஆ) (i) பண்டாரகம மற்றும் மில்லனிய பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் நடைபெறுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும், (ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு முன்வைப்பாரா? (இ) (i) ஆங்கில மொழிப் பயன்பாடு தொடர்பான எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கென சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஆகக்குறைந்தது ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்படுகின்ற இரண்டு பாடசாலைகளையாவது உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும், (ii) இன்றேல், இதன் பொருட்டு முன்வைக்கப்படுகின்ற மாற்றுத் தீர்வுகள் யாவையென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-10-06

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks