பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2010-08-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0358/2010: Recruitment of Judges

0358/ ‘10

கெளரவ அஜித் பி. பெரேரா,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2010 ஆம் அண்டில் நீதிவான்மன்ற நீதிபதிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

           (ii)    அதற்கு விண்ணப்பிப்பதற்கு நீதிச்சேவை ஆணைக்குழுவினால் பரீசீலிக்கப்பட்ட  அடிப்படைத் தகைமைகள் யாவை என்பதையும்,

(iii) மேற்படி பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சையொன்று நடத்தப்பட்டதா என்பதையும்,

(iv) அவ்வாறெனில், மேற்படி நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கான வெட்டுப் புள்ளி (cut off mark) யாதென்பதையும்,

(v) நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

(vi) மேற்படி நேர்முகப் பரீட்சையின் போது புள்ளிகள் வழங்கப்படும் நடைமுறை யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா?

(ஆ)மேற்படி பரீட்சையிலும் நேர்முகப்பரீ்ட்சையிலும் பெறப்பட்ட புள்ளிகள் அடிப்படையில் 2010ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட,

(i) விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(ii) இவர்களின் முழுப் பெயா்கள் யாவை என்பதையும்,

(iii) ஒவ்வொரு விண்ணப்பதாரிகளும் பரீட்சையிலும் நேர்முகப் பரீட்சையிலும் பெற்றுக்கொண்ட புள்ளிகள் வெவ்வோறாக யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) ஆட்சேர்ப்புப் போட்டிப்பரீட்சையிலிருந்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கும் போது பயன்படுத்தப்பட்ட வெட்டுப் புள்ளிக்கு (cut off mark) குறைவான புள்ளிகளைப் பெற்ற எவரேனும் விண்ணப்பதாரியோ அல்லது சிலரோ மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும்,

(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-05

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks