பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1061/ '16
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கவீனர்களான பலர் உள்ளனர் என்பதையும்;
(ii) இவர்களில் குறிப்பிடத்தக்கதொரு தொகையினரின் முள்ளந்தண்டுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் காரணமாக இடுபுக்குக் கீழ் பகுதி செயலிழந்துள்ளதென்பதையும்;
(iii) இடம்பெயர்ந்துள்ள இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதோடு இன்னும் சிலர் இதுவரை குடியமர்த்தப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் வீடுகள் மற்றும் மலசலகூடங்கள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும்போது மேற்கூறப்பட்ட அங்கவீனமுற்ற நபர்களின் வீடுகளுக்கு பிரவேசித்தல் மற்றும் மலசல கூடங்களைப் பயன்படுத்துதல் ஆகிய வசதிகள் தொடர்பாக கவனஞ் செலுத்தி அவற்றுக்குப் பொருத்தமான விதத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளையும் மலசலகூடங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அது எத்தனை சதவீதத்தில் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-21
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks