logo

02

E   |   සි   |  

 திகதி: 2010-08-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0357/2010: Base Hospital in Panadura

0357/ ‘10

கெளரவ அஜித் பி. பெரேரா,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் காணப்படும்,

           (i)      வாட்டுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்,

           (ii)    நோயளர்களுக்கான கட்டில்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்,

(iii) சத்திரசிகிச்சைக் கூடங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2010 மே மாதம் ஏற்பட்ட மழை காரணமாக சத்திரசிகிச்சைக் கூடம் உட்பட, இரண்டு வாட்டுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வாட்டுகளும் நீரில் மூழ்கியதென்பதையும்,

(ii) இந்தப் பாரதூரமான நிலைமை கடந்த சில வருடங்களினுள் ஒரு வருடத்திற்கு பல தடவைகள் நடைபெற்றதென்பதையும்,

(iii) மேற்படி நிலைமையினைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) (i) அவ்வாறாயின் இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்,

(ii) எவ்வளவு காலத்திற்குள் மேற்படி நடவடிக்கைகளைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-05

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks