பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0356/’10
கெளரவ அஜித் பி. பெரேரா,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பண்டாரகம பொது விளைாயட்டு மைதானம் உரித்தாயுள்ள அரச நிறுவனம் யாது என்பதையும்,
(ii) அவ்விளையாட்டு மைதானத்தின் பரப்பளவு யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டு்ப் போட்டிகளையும் தேசிய மட்டத்தில் நடத்துவதற்காக, அபிவிருத்தி செய்யக்கூடியளவு இடவசதியினைக் கொண்ட, உட்கட்டமைப்பு வசதிகளையுடைய ஓர் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்பதையும்,
(ii) 400 மீற்றர் ஓடு பாதையினை நிர்மாணிக்கக்கூடிய, பண்டாரகம தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரே மைதானம் இதுவாகும் என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) மேற்படி விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்காக 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை ஒவ்வோர் ஆண்டிலும்,
(i) மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை,
(ii) அதில் செலவிடப்பட்டுள்ள பணத்தொகை,
(iii) மேல் மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை,
(iv) அதில் செலவிடப்பட்டுள்ள பணத்தொகை
எவ்வளவென்பதை வெவ்வேறாக அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?
(ஈ) (i) தற்போது அவ்விளையாட்டு மைதானம் எந்தவொரு விளையாட்டுப் போட்டியினையும் நடத்த முடியாத நிலையில் இருப்பதனால், அதனை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்,
(ii) அவ்வாறாயின், அதற்காக மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-17
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
விளையாட்டுத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks