02

E   |   සි   |  

 திகதி: 2010-08-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0355/2010: Law Entrance Exam

0355/ ‘10

கெளரவ அஜித் பி. பெரேரா,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கைச் சட்டக் கல்லூரியின் நுழைவுப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க இயலுமான உச்ச வயது 35 ஆகவிருத்தல் வேண்டுமென ஒழுங்குவிதியொன்று ஆக்கப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) அது வர்த்தமானி அறிக்கையில் பிரசுரிக்கப்பட்டிருப்பின் அதன் பிரதியொன்று சபையில் சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்,

(iii) மேற்படி ஒழுங்குவிதி அங்கீகாரத்தின் நிமித்தம் பாராளுமன்றதத்திற்கு முன்வைக்கப்படும் திகதி யாது என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) அவ்விதம் உச்ச வயதை விதிப்பதற்கான தேவைப்பாடு உள்ளதா என்பதையும்,

(ii) அரசயிலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரைக்கும் அரச கொள்கைகளை நெறிப்படுத்தும் கோட்பாடுகளின் 27(2) (ஏ) உறுப்புரைக்கும் முரண்பட்டதாக அமையாதா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) கொழும்பு, இலங்கை திறந்த மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் சட்டமாணிப் (எல்.எல்.பீ.) பட்டதாரிகளுக்கு, இலங்கை சட்டக் கல்லுரியில் பிரவேசிப்பதற்கான உச்ச வயது விதிக்கப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) இன்றோல், சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை தொடர்பாக மட்டும் வயதெல்லை விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?

(ஈ) (i) மேற்படி சட்டக்கல்லூரிக்கான அனுமதிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான வயது எல்லை விதிப்பதைத் தவிர்க்குமாறு, சட்டக்கல்வி மன்றக் கட்டளைச் சட்டத்தின் 7(அ) பிரிவிற்கமைய, கட்டளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், எப்போது என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-04

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks