04

E   |   සි   |  

 திகதி: 2016-12-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

1026/2016: Efficiency Bar Exams of the Government Officials in Northern Province during their stay at the camps

1026/ '16

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1990 முதல் 2010 வரை இலங்கையின் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத விதத்தில் வட மாகாணத்தில் மாத்திரம் போக்குவரத்திற்காக அனுமதி பெறப்படுகின்ற முறையொன்று அமுலில் இருந்ததென்பதையும்;

(ii) இதன் காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள்கூட கொழும்புக்கு வந்துவிட்டு திரும்பிச் செல்லும் போது சிரமங்களை எதிர்நோக்கினர் என்பதையும்;

(iii) 2009 மே மாதம் முதல் சில மாதங்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரச ஊழியர்களில் கணிசமான அளவினர் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருந்தனர் என்பதையும்;

(iv) போக்குவரத்து சிரமங்கள் மற்றும் மேலே (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிலைமைகள் காரணமாக மேற்படி மாவட்டங்களில் கடமையாற்றிய அரச ஊழியர்களால் வினைத்திறன்காண் தடைப்பரீட்சைக்கு தோற்ற முடியவில்லை என்பதையும்,

அவர் அறிவாரா?

(ஆ) (i) ஆகையால், 2000/2001 ஆம் இலக்க சுற்றறிக்கைகள் அமுலுக்குவரும் திகதியை 2001.01.01 க்கு பதிலாக 2011.01.01 ஆக திருத்தியமைப்பதற்கும்;

(ii) அத் திகதியிலிருந்து 3 வருட சலுகைக் காலத்தை பெற்றுக்கொடுப்பதற்கும்;

(iii) இக்கால கட்டத்தினுள் வினைத்திறன்காண் தடைப்பரீட்சையில் சித்தியடையாமையின் காரணமாக சம்பள ஏற்றங்கள் பிற்போடப்பட்டிருப்பின், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும்,

(iv) அவ்வாறு சம்பள ஏற்றங்களை பிற்போடுவதற்குப் பதிலாக அதனை இடைநிறுத்துவதற்கும்;

நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-05

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks