logo

02

E   |   සි   |  

 திகதி: 2010-08-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0354/2010: Law Education Audinence

0354/ ‘10

கெளரவ அஜித் பி. பெரேரா,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     (276 ஆம் அத்தியாயமான) சட்டக் கல்வி மன்றக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் சட்டக் கல்லூரி நடவடிக்கைகளுக்கு ஏற்புடைய ஒழுங்கு விதிகளை விதிக்க முடியுமென்பதையும்,

(ii) சட்டத்தின் 7(1) வாசகத்தின் பிரகாரம், ஒழுங்கு விதிகளை விதிக்க நீதி அமைச்சரின் அனுமதி அவசியமென்பதையும்,

(iii) சட்டத்தின் 7(2) வாசகத்தின் பிரகாரம், ஒழுங்கு விதிகளை வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் துரிதகதியில் “அங்கீகரித்துக்” கொள்ள பாராளுமன்றத் திற்குச் சமர்ப்பிக்க வேண்டுமென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) சட்டக்கல்வி மன்றங்களுக்கு கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பாக எழுத்துமூலமான உத்தரவுகளைப் பிறப்பிக்க நீதி அமைச்சரொருவருக்கு அச்சட்டத்தின் 7(அ) வாசகத்தின் பிரகாரம் தத்துவம் அளிக்கப்பட்டுள்ளதுதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) அவ்வாறாயின், அத்தத்துவத்தை பொருத்தமான சந்தர்ப்பமொன்றில் நடைமுறைப் படுத்த அவர் நடவடிக்கை எடுப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-04

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks