logo

03

E   |   සි   |  

 திகதி: 2016-12-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

1022/2016: Kidney Disease in Gampaha District

1022/ '16

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) ரஜரட்ட பிரதேசத்தில் அதிகளவில் பரவியுள்ள சிறுநீரக நோய் தற்போது கொழும்பு, கம்பஹா போன்ற நகரப் பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்துள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சிறுநீரக நோய் அதிகரிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள காரணிகள் யாவை;

(ii) கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கிணங்க வெவ்வேறாக எவ்வளவு;

(iii) இனங்காணப்பட்டுள்ள நோயாளிகளின் நோய் நிவாரணத்திற்காக கடைப்பிடிக்கப்படுகின்ற விசேட சுகாதார நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை;

(iv) தொடர்ந்தும், இப்பிரதேசங்களில் சிறுநீரக நோய் பரவுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-01

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks