02

E   |   සි   |  

 திகதி: 2010-08-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0353/2010: Registered Voters in Bandaragama Pradeshiya Sabha Area

0353/’10

கெளரவ அஜித் பி. பெரேரா,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    பண்டாரகம பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்திற்குட்ட ,

           (i)     கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

           (ii)    நிலப்பரப்பளவு அண்ணளவாக எவ்வளவென்பதையும்,

(iii) பிரதேச செயலகப் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(iv) 2009 வாக்காளர் இடாப்பின் பிரகாரம் பதிவுசெய்துள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ)   (i) பண்டாரகம பிரதேச சபை ஆளுகைப்பிரதேசத்தை விட கூடதலாகப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கும் பிரதேச சபைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும் ,

(ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்,

(iii) அவ்வாறான பிரதேச சபைகளுக்குரிய பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) அதிக சனத்தொகை, நில அமைவு மற்றும் நிருவாக வசதி கருதி பண்டாரகம பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தை, பண்டாரகம மற்றும் மில்லனிய என இரண்டு பிரதேச சபைகளுக்கு அல்லது பண்டாரகம நகர சபை அத்துடன் மில்லனிய பிரதேச சபையென இரண்டு உள்ளூராட்சி நிறுவனங்களாகப் பிரிக்க நடவடிக்கை எடுப்பாரா?

(ஈ) அவ்வாறாயின், மேற்படியான புதிய உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் எப்போது நிர்ணயிக்கப்டுமென்பதையும் அவா் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-17

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks