பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
985/ '16
கௌரவ நளின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)
(அ) (i) 2015.12.31 ஆம் திகதியில் இலங்கையின் மின் உற்பத்திக் கொள்ளளவு யாதென்பதையும்;
(ii) புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் மூலம் பிறப்பாக்கம் செய்யப்படுகின்ற மின்சாரமானது மொத்த மின் பிறப்பாக்கக் கொள்ளளவின் விகிதாசாரமாக எவ்வளவென்பதையும்;
(iii) உலகில் மின் உற்பத்திக்காக புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களைப் பயன்படுத்துகின்ற நாடுகளுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள இடம் யாதென்பதையும்;
(iv) சூரிய சக்தி, காற்றுச் சக்தி மற்றும் உயிர்த்தொகுதி சக்தி ஆகிய மூலங்களைத் தழுவியதாக மின் பிறப்பாக்கம் செய்யப்படுவதற்காக இலங்கை அரசாங்கம் அல்லது அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களால் கடந்த 10 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடு எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) காற்றுச் சக்தி, சூரிய சக்தி மற்றும் உயிர்த்தொகுதிச் சக்தியைத் தழுவியதாக மின் பிறப்பாக்கம் செய்யப்படுதல் தொடர்பான துறைகளுக்குரியதாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறைவடைவதற்கான காரணம் யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-11-25
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-03-22
பதில் அளித்தார்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks