பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2016-11-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0981/2016: நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்காகப் பெற்ற கடன் : விபரம்

981/ '16

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

(அ) (i) நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்வலு நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கி களின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி ஒவ்வொரு மின் பிறப்பாக்கியும் மின் உற்பத்தி செய்வதை ஆரம்பித்த வருடம் வெவ்வேறாக யாது;

(iii) மேற்படி மின் பிறப்பாக்கிகளுக்காக இலங்கை அரசு ஏற்றுள்ள மொத்தச் செலவு எவ்வளவு;

(iv) இக்கருத்திட்டத்துக்கான நிதி எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) நுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்காகப் பெறப்பட்ட கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படும் முறை யாது;

(ii) கடன் தொகை செலுத்தப்படுவது இலங்கை மின்சார சபையினாலா அல்லது இலங்கை சனநாயக சோசலிச குடியரசினாலா;

(iii) வருடமொன்றுக்கு செலுத்தப்படும் தவணைப் பணத்தின் மொத்தத்தொகை எத்தனை மில்லியன் அமெரிக்க டொலர்கள்;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-26

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-04-25

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks