04

E   |   සි   |  

 திகதி: 2016-11-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0950/2016: Water Supply Projects and Community Water Supply Projects - Divulapitiya

950/ '16

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திவுலப்பிட்டிய தொகுதியில் பருகுவதற்கான குழாய்நீர் வழங்கப்பட வேண்டிய குடும்பங்களின் எண்ணிக்கை பற்றி மதிப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

(ii) தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நீர் வழங்கல் கருத்திட்டங்களிலிருந்து குழாய் நீர் வழங்கப்படுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

(iii) அது மொத்த தேவையின் சதவீதமென்ற வகையில் எவ்வளவு;

(iv) புதிய நீர் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள நுகர்வோரின் எண்ணிக்கை யாது;

(v) நிலவுகின்ற நீர் வழங்கல் கருத்திட்டத்திலிருந்து மேற்படி எண்ணிக்கையில் எத்தனை பேருக்கு நீர் வழங்க முடியும்;

(vi) நிலவுகின்ற கருத்திட்டத்தின் கொள்ளளவு புதிய இணைப்புகளை வழங்க போதுமானதா;

(vii) இன்றேல், கொள்ளளவை விருத்திசெய்வதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா;

(viii) ஆமெனில், அது யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) தொகுதியில் நடைமுறையிலுள்ள சமுதாய நீர் வழங்கல் கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாது;

(ii) அதன் மூலமாக குடி நீர் வழங்கப்படுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

(iii) சமுதாய நீர் வழங்கல் கருத்திட்டங்களை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா;

(iv) ஆமெனில், அது யாது;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) திவுலப்பிட்டிய நீர் வழங்கல் கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாது;

(ii) கருத்திட்டத்திற்காக செலவாகின்ற பணத்தொகை யாது;

(iii) அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதா;

(iv) நீர் வழங்கத் திட்டமிட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

(v) கருத்திட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-25

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks