04

E   |   සි   |  

 திகதி: 2016-11-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0949/2016: Paddy fields, paddy farmers and anicuts in Gampaha District

949/'16

கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) கம்பஹா மாவட்டத்திலுள்ள முழுமையாகக் கமத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கம்பஹா மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கை செய்யப்படும் வயல் காணிகளின் பரப்பளவு யாது;

(ii) அவற்றில் இவ்வருடத்தில் பயிர்ச்செய்கை செய்யப்படாத காணிகளின் பரப்பளவு யாது;

(iii) நெற்பயிர்ச்செய்கை செய்யப்படாத காணிகளில் பயிர்ச்செய்கை செய்யப்படாமைக்கான காரணங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) கம்பஹா மாவட்டத்தில் நெல் அல்லாத வேறு பயிர்கள் செய்கை பண்ணப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு யாது;

(ii) அவ்வாறு பயிர்ச்செய்கை செய்யப்பட்டுள்ள பயிர்கள் யாவை;

என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) (i) கம்பஹா மாவட்டத்தில் கமத்தொழில் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் அணைக்கட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) தற்போது மேலே (i) இல் குறிப்பிடப்பட்ட அணைகளில் செயலிழந்துள்ள அணைக்கட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(iii) மாவட்டத்திலுள்ள கால்வாய்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(iv) அவற்றில் இவ்வருடத்தில் திருத்தப்பட்டுள்ள எண்ணிக்கை எவ்வளவு;

(v) மாவட்டத்திலுள்ள அணைக்கட்டுக்களையும் கால்லாய்களையும் சுத்திகரிப்பதற்காக 2016 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-24

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks