02

E   |   සි   |  

 திகதி: 2017-04-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0893/2017: பாணம கிராமத்தில் வசிக்கும் மக்கள்: அடிப்படைத் தேவைகள்

கௌரவ புத்திக பத்திறண,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிழக்கு மாகாணத்தின், பாணம கிராமத்தில் வசிக்கும் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மிகவும் சகவாழ்வுடன் வசிக்கின்றார்கள் என்பதையும்;

(ii) இம்மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) பாணம பிரதேச மக்களின் தண்ணீர், காணி சார்ந்த பிரச்சினைகளை தீா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், அவை யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி மக்களின் கலாசார தனித்துவங்கள் மற்றும் பாரம்பரிய உரிமைகளை பேணி வாழ்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், எவ்வாறு என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-04-07

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-09-19

பதில் அளித்தார்

கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks