பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
876/ '16
கௌரவ விதுர விக்கிரமநாயக்க,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை முதலீட்டுச் சபையின், ஹொரணை தயாரிப்பு வலயம் அமைந்துள்ள பிரதேசத்தில், அருணகம கிராமத்துக்குச் செல்வதற்கு பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலிருந்து காணப்பட்ட வீதியில், வாயில்கள் நிர்மாணிக்கப்பட்டு பூட்டுப் போடப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்பதையும்;
(ii) இப்பிரதேசத்துக்கான முன்னைய வரைபடத்தில் மேற்குறிப்பிட்ட வீதி குறிக்கப்பட்டிருந்த போதிலும், முதலீட்டுச் சபையினால் புதிதாகத் தயாரிக்கப்பட்ட வரைபடத்தில் இந்த வீதி குறிக்கப்படவில்லை என்பதையும்;
(iii) மேற்படி பிரதேசத்தில் கோல்ப் விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிப்பதற்காக, வீதிக்கு உரித்தான பகுதியையும் அரசாங்கம் விற்பனை செய்துள்ளதென்பதையும்;
(iv) கைத்தொழிலுக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் கோல்ப் விளையாட்டு மைதானமொன்றை அமைப்பதன் மூலம், பிரதேசத்தின் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புக்களை இழந்துள்ளார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) வீதி அமைந்துள்ள ஒரு காணியை விற்பதற்கான இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) மேற்படி வீதியை மூடிவிடுவதன் மூலம், மக்கள் இலகுவில் பிரதான வீதிக்கு பிரவேசிக்கக்கூடிய ஒரு வீதியை இழக்கச் செய்தல் முறையானதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-10-06
கேட்டவர்
கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.
அமைச்சு
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks