01

E   |   සි   |  

 திகதி: 2016-10-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0869/2016: Development of Rural Dispensaries Badulla District

869/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் அந்தப் பதவிக்கு நியமனம் பெற்றதன் பின்னர் மாகாண சுகாதார சேவையின் முன்னேற்றம் ஓரளவு மெதுவாக இடம்பெறுகின்றது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

(ii) ஆமெனில், ஊவா மாகாணம், குறிப்பாக பதுளை மாவட்டத்தில் ஊவா மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் கிராமிய மருந்துச்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு முறையான வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-10-25

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks