01

E   |   සි   |  

 திகதி: 2016-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0866/2016: Road Development by the current CM on Uva

866/ '16

 

கௌரவ சமிந்த விஜேசிறி,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) ஊவா மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டதையடுத்து,

(i) இற்றைவரை பதுளை மாவட்டத்தின் மாகாண சபைக்கு சொந்தமான வீதிகளை அபிவிருத்தி செய்துள்ளாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அவ்வீதிகள் யாவையென்பதையும்;

(iii) ஒவ்வொரு வீதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட்ட கம்பனிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

(v) இவ்வீதிகள் உயர் தரத்தில் உள்ளதென்பதற்கான ஆதாரங்கள் யாவையென்பதையும்;

(vi) மேற்படி வீதிகளை அபிவிருத்தி செய்யும் விடயத்திலும் தெரிவு செய்தலின் போதும் ஊவா மாகாண முதலமைச்சர் தலையீடு செய்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-10-07

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks