பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
864/ '16
கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவராக திரு. சந்தன பெல்பிட்ட சேவையாற்றுகின்றாரா என்பதையும்;
(ii) ஆமெனில், இவரது சம்பளம், கொடுப்பனவுகள், வழங்கப்பட்டுள்ள வாகனங் களுக்கான மாதாந்த வாடகை ஆகியன தனித்தனியே யாது என்பதையும்;
(iii) சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் 2015 நவம்பர் 06 ஆம் திகதியிடப்பட்ட PCI/52/2015 ஆம் இலக்க மனுவின் கீழ் கமத்தொழில் அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திரு. சந்தன பெல்பிட்ட இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தானத்தின் பிரதிப் பொது முகாமையாளராக சேவையாற்றிய காலத்தில் மேற்கொண்டுள்ள பாரிய நிதி மோசடிகள் யாவை என்பதையும்;
(v) மேற்படி நிதி மோசடிகள் தொடர்பிலான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகள் யாவை என்பதையும்;
(vi) மேற்படி சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட்ட திகதி யாது என்பதையும்;
(vii) சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படவில்லை எனின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-10-07
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-02-07
பதில் அளித்தார்
கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks