பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
803/ '16
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) 1996ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க வலதுகுறைந்தோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம், வலதுகுறைந்தோர்கள் பிரவேசித்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில், சேவை வழங்கும் சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களில் வலதுகுறைந்தோர்களுக்காக விசேட பிரவேச வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்பதையும்;
(ii) குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டு எட்டு ஆண்டுகளினுள், அரச மற்றும் தனியார் சேவை வழங்கலை மேற்கொள்ளும் சகல கட்டிடங்களிலும் வலதுகுறைந்தோர்களுக்கு பிரவேசித்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் குறித்த வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்பதையும்;
(iii) அரச மற்றும் தனியார் சேவை வழங்கும் நிறுவனங்களில் இதுவரை மேற்குறிப்பிடப்பட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்படாதுள்ள நிலமை காணப்படுகின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) வலதுகுறைந்தோர்களுக்கு இலகுவில் பிரவேசித்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மேற்குறிப்பிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-20
கேட்டவர்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks