பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
790/ '16
கௌரவ விதுற விக்கிரமநாயக்க,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ராஜகிரியவில் அமைந்துள்ள விக்டோரியா இல்லம் 14 வாட்டுகளை கொண்டுள்ளதோடு குணப்படுத்த முடியாத 153 ஊனமுற்றவர்கள் தங்கியுள்ளனரென்பதையும்;
(ii) மேற்படி இல்லத்தில் தங்கியுள்ளவர்களின் அனைத்து பணிகளுக்காக மற்றும் நீர், மின்சாரம், ஊழியர் சம்பளம் உட்பட நிர்வாக செலவுகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் ரூபா 08 மில்லியன் தொகையை பெற்றுக் கொடுக்கின்றதென்பதையும்;
(iii) மேற்படி தொகை அப் பணிகளுக்கு போதுமானதல்ல என்பதையும்;
(iv) ஊழியர்களுக்கு செலுத்தப்படுகின்ற சம்பளம் போதியதாயில்லாமையினால் புதிதாக ஊழியர்களை ஆட்சேர்க்க முடியாதுள்ளதன் மூலம் பணியாட்டொகுதியினரும் போதுமான அளவில் இல்லையென்பதையும்;
(v) பணியாட்டொகுதியினருக்கு போதிய அளவு உத்தியோகபூர்வ விடுதி வசதிகள் இல்லாமை மற்றும் போதியளவு சம்பளம் கிடைக்காமையினால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களிடமிருந்து சிறந்த சேவையினை பெற்றுக்கொள்வது பிரச்சினையாக உள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) தற்போதுள்ள ஊழியர்களிடமிருந்து ஆகக்கூடிய சேவையை பெற்றுக் கொள்வதற்காக அவர்களது சம்பளத்தை அதிகரிக்கவும் வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) புதிதாக ஊழியர்களை ஆட்சேர்ப்பதற்காக நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-06
கேட்டவர்
கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks