பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
786/ '16
கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பாரம்பரிய உள்நாட்டு கைத்தறி நெசவுக் கைத்தொழில் நிகழ்காலத்தில் பாரிய நெருக்கடி நிலைமைக்கு உள்ளாகி இருக்கின்றதென்பதையும்;
(ii) இந்த உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதோடு தரமான உற்பத்தி களுக்காக உயர்மட்ட விலையைப் பெற்றுக்கொள்ள இயலுமென்பதையும்;
(iii) கம்பஹா மாவட்டத்தில் பாரியளவில் பரவியுள்ள இந்த கைத்தொழிலுக்காக கடந்த அரசாங்கம் திவுலபிட்டிய, மடம்பெல்ல பிரதேசத்தில் ஏறக்குறைய 300 பாரம்பரிய கைத்தொழிலாளர்களுக்கு இயந்திர சாதனங்களையும் அறிவையும் வழங்கியதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) கம்பஹா மாவட்டத்தில்,
(i) குடிசைக் கைத்தொழிலாக இந்த கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள்;
(ii) நெசவுக்கைத்தொழில் நிலையங்கள்;
(iii) வசதிகளை வழங்க உள்ள உத்தியோகத்தர்கள்;
எண்ணிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேலே அ (iii) இல் குறிப்பிட்டுள்ள ஆட்களின் நிலைமை பற்றி கண்டறியப்பட்டுள்ளதா;
(ii) கைத்தொழிலில் தற்போது ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு;
(iii) இவர்களின் மாதாந்த உற்பத்தி எவ்வளவு;
(iv) இவை யாருக்கு சந்தைப்படுத்தப்படுகின்றன;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) (i) தட்டுப்பாடு நிலவுகின்ற மூலப்பொருட்களை வழங்க வேலைத்திட்டமொன்று உள்ளதா;
(ii) உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய அல்லது கொள்வனவாளர்களை தொடர்புபடுத்தும் வேலைத்திட்டமொன்று உள்ளதா;
(iii) பயிற்சி செயலமர்வுகள் அல்லது சந்தைப்படுத்தல் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்படுகின்றனவா;
(iv) ஆமெனில் இறுதியாக அத்தகையதொன்று நடத்தப்பட்ட திகதி யாது;
(v) கைத்தொழிலை விருத்திசெய்யும் வேலைத்திட்டம் யாது;
என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-09
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks