பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
784/ '16
கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கம்பஹா மாவட்டத்தில் பூக்கள் மற்றும் அலங்கார இலைகள் சார்ந்த கைத்தொழிலில் ஈடுபடுகின்ற ஏறக்குறைய 5000 பேர் இருக்கிறார்கள் என்பதையும், ஏறக்குறைய 28 சங்கங்கள் இயங்கிவருகின்ற இக்கைத்தொழிலுக்கு கடந்த அரசாங்கம் ஊக்குவிப்புகளை வழங்கியதென்பதையும் அவர் அறிவாரா?
(ஆ) (i) கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், பிரதேச செயலாளர் பிரிவுக்கிணங்க ஓகிட், அந்தூரியம் மற்றும் அலங்கார இலைகளின் செய்கையாளர்கள், சந்தைப்படுத்துனர்கள், சிறிய நடுத்தர அளவிலான மற்றும் பாரிய அளவிலான செய்கையாளர்கள் மற்றும் பூக்களின் ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
(iii) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் முதல் காலாண்டில் (அ) இல் குறிப்பிட்ட ஆட்களை ஊக்குவிக்கவும் தொழில்முயற்சியில் தக்கவைத்துக்கொள்ளவும் புதியவர்களை தொழில்முயற்சிகளில் இணைத்துக்கொள்வதற்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள், வழங்கிய நிவாரணங்கள், அதற்காக ஒதுக்கிய பணத்தொகை மற்றும் நன்மைபெறுனர்களின் எண்ணிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா;
(இ) கடந்த அரசாங்கத்தினால் களணிய பல்கலைகழகத்தினூடாக கம்பஹா தாவரவியல் பூங்காவில் ரூபா 22 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இழையச்செய்கை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், உருவாக்கப்பட்டுள்ள மலர் வகைகள், நாற்றுகள் வழங்கப்பட்ட மலர் தொழில்முயற்சியாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-06
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks