04

E   |   සි   |  

 திகதி: 2016-07-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0679/2016: Development of Rakwana- Madampe Road

679/ '16

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) கொடகவெல பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய ரக்வான – மாதம்பே வீதியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்கின்ற கருத்திட்டத்தின் வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளதா என்பதையும்;

(ii) இன்றேல், வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றளவில் கடந்துள்ள காலம் எவ்வளவென்பதையும்;

(iii) இதன் போது காணிகளை மாத்திரம் இழந்துள்ள மற்றும் வீடுகளை இழந்துள்ள ஆட்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி வீதி அபிவிருத்தியின் போது காணிகள் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகை எவ்வளவென்பதையும்;

(ii) இவர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள இழப்பீட்டுத் தொகை இது வரை வழங்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி இழப்பீட்டுத் தொகையை துரிதமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iv) அதற்காக எடுக்கும் காலம் எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-22

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks