பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
678/'16
கௌரவ ரி. ரன்ஜித் த சொய்ஸா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) அரச பாதுகாப்புச் சேவைக்குரிய இராணுவப்படை, விமானப்படை, கடற்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகியவற்றில் நடவடிக்கைக் கடமையில் ஈடுபட்டிருக்கையில் மருத்துவக் காரணங்களின் கீழ், அங்கவீனமுற்ற படைவீரர்களென ஓய்வு பெறச்செய்யப்பட்ட 55 வயதுக்கு மேற்பட்ட படைவீரர்களான அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாது;
(ii) இவ்வுத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் ஒவ்வொரு கொடுப்பனவின் பெறுமதி வெவ்வேறாக யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேலே அ(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு அங்கவீன படைவீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமைக்கான ஓய்வூதியம் வழங்கப்படுகின்றதா;
(ii) 55 வயது பூர்த்தியான பின்னர் இயலாமைக்கான ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டு சாதாரண அரச ஊழியரெனக் கருதி வழங்கப்படும் கொடுப்பனவு எவ்வளவு;
(iii) முழு அங்கவீன நிலையிலுள்ள ஒருவருக்கு மேலே (ii) இன் படி வழங்கப்படும் கொடுப்பனவு நியாயமானதா;
(iv) 55 வயது பூர்த்தியாவதற்கு முன்னர் அங்கவீனமுற்ற படை வீரர் ஒருவர் மரணித்தால், அவரில் தங்கிவாழ்வோருக்கு கொடுப்பனவொன்று வழங்கப்படுகின்றதா;
(v) ஆமெனில், அது பற்றிய முறையியல் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-23
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks