01

E   |   සි   |  

 திகதி: 2016-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0649/2016: Second Stage of Ruhunupura Water Supply Project

649/'16

10.

கௌரவ நாமல் ராஜபக்‌ஷ,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) அம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்ட ருகுணுபுர நீர் வழங்கல் திட்டத்தின் II வது கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா;

(ii) இதற்காக செலவிட மதிப்பீடு செய்யப்பட்ட பணத் தொகை எவ்வளவு;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) II வது கட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுகின்ற கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை யாது;

(ii) தற்போது குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகள் யாவை;

(iii) குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்படாதுள்ள கிராம அலுவலர் பிரிவுகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) தற்போது குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்படாதுள்ள கிராம அலுவலர் பிரிவுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;

(ii) இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-08

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks